வீட்டிற்கான வாஸ்து

உங்களது செல்வம், ஆரோக்கியம், கல்வி, வேலை மற்றும் உறவுகளில் வீட்டிற்கான வாஸ்து பெரும் பங்காற்றுகிறது. ஒரு நாளின் பெரும்பகுதியை நாம் வீட்டில் கழிக்கிறோம். உங்களது வீட்டில் உள்ள ஆற்றல் மட்டம், அது நேர்மறையாக இருந்தாலும் சரி, எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதன் அதிர்வலைகள் உங்கள் உடலில் பிரதிபலிக்கும். அது நேர் வழியிலோ அல்லது எதிர் வழியிலோ அன் விளைவுகளை உங்கள் உடலிலும் ஆன்மாவிலும் உண்டு பன்னும். இது நம்மை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதித்து, வளமைக்கோ அல்லது பிரச்சினைக்கோ இட்டுச்செல்லும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சிலவற்றைக் குறித்து நாம் அக்கறை கொள்ளவேண்டியுள்ளது. அப்போதுதான் நேர்மறை ஆற்றல் உருவாகும்.

ஒரு வீட்டில் எட்டு திசைகள் உள்ளன. ஒரு நபருக்கு, அவற்றுள் நான்கு திசைகள் அதிர்ஷ்டமாகவும் நான்கு திசைகள் துரதிருஷ்டமாகவும் உள்ளன. வீட்டின் முக்கிய பகுதிகள் அனைத்தும் குடும்பத் தலைவரின் அதிர்ஷ்ட திசைகளில் அமைய வேண்டும். அப்போதுதான் அவரால் அவர் குடும்பத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன், வளமாக, செல்வச் செழிப்புடன் வாழ முடியும்.

ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு தனிநபருக்குமான வாஸ்து வரைபடத்தை சரல் வாஸ்து அளிக்கிறது. அதில் அவர்களது அதிர்ஷ்ட, துரதிருஷ்ட திசைகள் உள்ளன. அந்தக் குடும்பத்தலைவர் மற்றும் அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் வாஸ்து பொருத்தத்தை நமது வாஸ்து நிபுணர்கள் ஆராய்ந்து, ஒரு கணிப்பு அறிக்கையை அளிக்கின்றனர். அந்த குடும்பத்தலைவருக்கும் அவரது வீட்டிற்கும் இடையே உள்ள பொருத்தமின்மை, அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்குகின்றன. அந்த வீட்டில் எந்த வடிவமைப்பு மாற்றமும் இல்லாமல் அத்தகைய அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது வாஸ்து நிபுணர்கள் பரிகாரங்களை வழங்குகிறார்கள்.

ஆரோக்கியத்திற்கான வாஸ்து

ஆரோக்கிய ஸ்தானம் – ஆரோக்கியத்திற்கான இடம்

வீட்டில் உள்ள ஆரோக்கிய ஸ்தானம் துரதிருஷ்ட திசையில் இருந்தாலோ அல்லது அதில் குளியலறையோ கழிவறையோ இருந்தால் அதனால் அந்தத் தனிநபரின் வாழ்விலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆரோக்கியத்தில் சிக்கல் ஏற்படும்.

ஒரு தனிநபரும் அவரது குடும்பத்தினரும் சந்திக்கும் பல்வேறு விதமான பிரச்சினைகளும், அவர்கள் சந்திக்கும் மருத்துவ நிலைகளும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன.

  • அறுவைசிகிச்சைக்கான தேவை
  • குழந்தையற்ற தம்பதிகள்
  • எந்தவிதமான பெரிய சிக்கலும் இல்லையெனினும் மருத்துவ விவகாரங்களுக்கு அதிகம் செலவு செய்வது

செல்வத்திற்கான வாஸ்து

வீட்டின் தனமூலை துரதிருஷ்ட திசையில் இருந்தாலோ அல்லது அங்கு குளியலறையோ கழிவறையோ இருந்தாலோ அதனால் செல்வம் உருவாவதிலும் தங்க வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.

பல்வேறு விதமான நிதி சிக்கல்கள் அந்தத் தனிநபருக்கு ஏற்படும். சேமிப்பது என்பதே சாத்தியம் இல்லை.

கல்விக்கான வாஸ்து

வீட்டில் உள்ள கல்வி ஸ்தானம் துரதிருஷ்ட திசையில் இருந்தாலோ அல்லது அங்கு குளியலறையோ கழிவறையோ இருந்தாலோ அதனால் குழந்தைகளின் கல்வி விவகாரங்களில் சிக்கல் ஏற்படும்.

கல்வியில் குந்தைகள் பல்வேறு விதமான சிக்கல்களை சம்பாதிப்பர்.

  • படிப்பில் ஆர்வத்தை இழத்தல்
  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • நினைவக தக்கவைப்பு குறைவாக உள்ளது
  • முயற்சிகள் இருந்தபோதிலும் நல்ல தரங்களைப் பெற முடியவில்லை

பெயர் மற்றும் புகழுக்கான வாஸ்து

நம்முடைய வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ நமது பெயரும் புகழும் தவறினால், அதனால் நமது பெயர், புகழ், நல்லெண்ணம் ஆகியவை பாதிக்கப்படும். வாழ்நாள் முழுக்க நாம் சந்திக்க நினைக்கும் பெயரும் புகழும் கிடைக்காது. மக்களுக்கு அவர்களது படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத்திறனை வெளிக்காட்ட இயலாது.

வேலைக்கான வாஸ்து

உங்கள் வீட்டில் வேலைக்கான வாஸ்து துரதிருஷ்ட திசையில் இருந்தாலோ அல்லது அங்கு குளியலறையோ கழிவறையோ இருந்தாலோ அதனால் தனிநபர்களது பணியில் தொல்லைகள் ஏற்படும்.

பணியிழத்தல் போன்ற வேலை மாற்றங்களை அவர்களது பணிகளில் தனிநபர்கள் சந்திப்பார்கள். அவர்களது பணிக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டு கிடைத்தல் குறையும்.

திருமணத்திற்கான வாஸ்து

ஒரு வீட்டின் உறவு அல்லது திருமணத்திற்கான ஸ்தானம் துரதிருஷ்ட திசையில் இருந்தாலோ அல்லது அங்கு குளியலறையோ கழிவறையோ இருந்தாலோ அதனால் தனிநபர்களின் திருமணம் மற்றும் உறவுகளில் தொல்லைகள் ஏற்படும்.

தனிநபர்கள் தங்களது திருமணத்திலும் உறவுகளிலும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பார்கள். பொருத்தமிருந்தும் திருமணம் தாமதமாக நடத்தல், கணவன் மனைவிக்கு இடையில் சுமூகமற்ற உறவு, சகோதர சகோதரிகள், தாய் தந்தை ஆகியோருக்கு இடையில் சுமூகமற்ற உறவு, விவாகரத்து முதலிய சிக்கல்கள் தோன்றும்.

உறவுகளுக்கான வாஸ்து

ஒவ்வொரு வீட்டிலும் பணியிடத்திலும் உறவுகளுக்கான ஸ்தானம் இருக்கும். சில சமயம் உறவு ஸ்தானமானது ஒருவரின் வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ இருக்காது. அல்லது வீட்டில் உறவு ஸ்தானம் இருந்தாலும், அங்குள்ள கழிவறை, குளியலறை, பயன்பாட்டு அறை ஆகிவற்றின் இடத்தால் உறவு ஸ்தானம் தடுக்கப்பட்டிருக்கும். இதனால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் உறவு விவகாரங்கள் கசக்க ஆரம்பிக்கும்.

தனிநபர்கள் தங்களது திருமணத்திலும் உறவுகளிலும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையில் சுமூகமற்ற உறவு, சகோதர சகோதரிகள், தாய் தந்தை ஆகியோருக்கு இடையில் சுமூகமற்ற உறவு, விவாகரத்து முதலிய சிக்கல்கள் தோன்றும்.

சட்ட ரீதியான காரணங்களுக்கான வாஸ்து

இன்றைய உலகில் பகை, விரோதம், கருத்து வேறுபாடு, ஒருவருக்கு ஒருவர் எதிரான விரோதப் போக்கு ஆகியவற்றை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். அவற்றை தவிர்க்க முடியவில்லை. இது ஒரு தனிநபரின் மன அமைதியையும் இணக்கத்தையும் மட்டும் பாதிக்கவில்லை, ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது. அவர்களுடன் தொடர்புள்ளவர்களையும் பாதிக்கிறது. மாறாக, அந்தக் குடும்பத்திற்கும் அதன் உறுப்பினர்களும் சமூகத்தின் பார்வையில் அவப்பெயரையும் அவமானத்தையும் வாங்கித் தருகிறது. சட்ட சிக்கல்களில் சிக்கும் நிலமும் சொத்துக்களும்