உங்கள் ஆரோக்கியத்தின் மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?
hVastu For Health

ஆரோக்கியம் என்பது வாழ்வின் மிக முக்கியமான அம்சம். அறிவார்த்தமான பழமொழி ஒன்று உண்டு, ‘ஆரோக்கியமே செல்வம்’. இது அனைவருக்கும் பொருந்தக்கூடிய முழுமையான உண்மை. ஆரோக்கியமான உடலில் குடியிருக்கும் ஆரோக்கியமான மனது இன்றைய மன அழுத்தம்மிக்க மனிதர்களுக்கு மிகப் பொருத்தமான அறிவுடமை. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய சுமூகமான தினசரி நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும். அதை முதன்மையாகக் கருதுவதால், இந்த அனைத்துப் பதட்டங்களும் மன அழுத்தமும் வீடு அல்லது பணியிடம் தொடர்பாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொருவருடைய மன அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன.

இந்த நவீன உலகில், ஒவ்வொருவரும் வாழ்வின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மோசமாக சிதைவுறுகிறது. எங்கு பார்த்தாலும் ஏதேனும் ஒரு நோயால் அல்லது வேறு ஏதேனும் ஒரு நோயின் வடிவத்தில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சில குடும்பங்களில், வெளிப்படையாகத் தென்படவில்லை என்றாலும், எவ்விதக் காரணங்களும் இல்லாமல் யாராவது ஒருவர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுகிறார். இது, ஏன் நாம் மட்டும் அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கஷ்டமான காலங்களிலேயே வாழ நேரிடுகிறது என்று குடும்பத்தினர் சிந்திக்கவும் கவனத்தில் கொள்ளவும் செய்கிறது.

குடும்ப ஆரோக்கியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் காரணிகள்

சமஸ்கிருதத்தில் ஆரோக்கிய ஸ்தானம் என அழைக்கப்படுகிற ஒரு வீட்டின் ஆரோக்கிய-இடம், குடும்பத்தினரின் உடல் நலன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. சில வீடுகளில், ஆரோக்கிய-இடம் அமைக்கப்படாமல் இருக்கலாம் அல்லது குளியலறை, கழிவறை அல்லது வேறு பயன்பாட்டு அறைகளால் தடுக்கப்பட்டிருக்கும். வீடு அல்லது பணியிடத்தில் உள்ள ஆரோக்கிய-இடம் பாதிக்கப்பட்டால், குறிப்பிடப்பட்ட அனைத்து உடல் நலப் பிரச்சினைகளும் எப்பொழுதும் குடும்பத்தினர் மீது கவிழ்ந்து துன்பத்திற்கும் மன நெருக்கடிக்கும் வழி வகுக்கும்.

வீடு அல்லது பனியிடத்தின் முதன்மை நுழைவாயில் சாதகமற்ற திசையில் அமைந்திருந்தால், அதன் விளைவாக வீடு/பணியிடத்தில் உள்ளவர்களின் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

உறங்கும் பொழுது, நாம் தற்செயலாக, சாதமற்ற திசையைப் பின்பற்றினால், அது 7 சக்கரங்களை நிச்சயம் பாதிக்கும். ஒருவர் சிறப்பான உடல் நலன் மூலம் தூண்டப்பட்ட ஆழ்ந்த உறக்கம் பெறுவதன் காரணமாக 7 சக்கரங்களும் புத்துயிர் பெறுகின்றன. அதன் விளைவாக, மனித உடலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.

வீட்டின் தவறான அமைவிடத்தில் சமையலறை அமைந்திருக்குமானால், அது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

மக்களில் பலர் அடிக்கடி மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும், பெரும் தொகையை இதற்காகச் செலவிடுவதும் கண்கூடு. ஆனால், சம்பந்தப்பட்ட நபரின் உடல் நலனில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. முறையான நோய் கண்டறிதல் இல்லாமல், இன்னமும் சில வகையான நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. வீட்டில் மீதமுள்ள அனைத்து உறுப்பினர்களும் உறவினர்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எந்தவிதமான தீய பழக்க வழக்கங்களும் இல்லாதவர்களும் கூட, நீரிழிவு, சிறுநீரகக் கல், ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது மருத்துவர்களுக்கும் அதே போல பொது மக்களுக்கும் ஆச்சரியம் தரக்கூடியதாக உள்ளது.

சிறு சிறு விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. அவை பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சைகளுக்கு வழிவகுக்கின்றன.

உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளை முறியடிப்பதில் சரல் வாஸ்து எவ்வாறு உதவுகிறது?

சரல்வாஸ்து கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் வீடு / பணியிடத்தில் உள்ள ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எவ்விதக் கட்டுமான உடைபாடுகளும் மாற்றங்களும் இல்லாமல் எளிமையான, விஞ்ஞானப்பூர்வமான தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இடத்தில் தான் “ஆரோக்கியத்திற்கான வாஸ்து” என்ற கருத்தாக்கம் நுழைகிறது.

உறக்கத்திற்கும் உகந்த படுக்கையறை அமைவிடத்திற்கும் நேர்மறைச் சூழலைத் தரக்கூடிய சரியான திசையை சரல் வாஸ்து அறிவுறுத்துகிறது. அது ஒருவருக்கு 6 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தைத் தூண்டுகிறது. அது அடுத்த நாள் செயல்பாடுகளை முழு உத்வேகத்துடன் எதிர்கொள்வதற்கும் நாள் முழுவதும் நேர்மறை ஆற்றல் நீடித்திருப்பதற்கும் 7 சக்கரங்களையும் இயக்கி, புத்துணர்ச்சி அளிக்கிறது. அதே போல, புத்துணர்ச்சி சுழற்சி அடுத்த இரவுக்கும், மேலும் அடுத்து வரும் நாட்களுக்கும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். இந்த முறையில், நமது 7 சக்கரங்களும் தினசரி புத்துணர்ச்சி பெறுவதால், ஒருவருக்கும் எந்த விதமான ஆரோக்கியமற்ற அல்லது நோய் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுவதற்குச் சாத்தியமில்லை.