உங்கள் நுழைவாயில் மற்றும் முன்கதவு மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?
Vastu for Entrance and Main Door

வசிப்பதற்கு அல்லது முதலீடு செய்வதற்காக மக்கள் ஒரு புதிய மனை இடம் வாங்கத் திட்டமிடும் பொழுது, அந்த இடம் தங்களுக்கு உகந்த திசை நோக்கி அமைந்துள்ளதா என கட்டுமான நிறுவனத்திடமும், விற்பவரிடமும் முகவரிடமும் கோரிக்கை வைப்பது பொதுவாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. அதே போல, மனையிடம் வைத்துள்ளவர்கள் அதில் ஒரு புதிய வீட்டைக் கட்டத் திட்டமிடும் பொழுது, அது தங்களுக்கு உகந்த திசை நோக்கி அமைந்திருக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள். தங்களுக்கு சாதகமற்ற திசையை எதிர்நோக்கியிருக்கும் வீடுகளில் வசிக்கும் பல குடும்பங்கள் – அது கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அல்லது தனிக் குடித்தனமாக இருந்தாலும் – அத்தகைய வீடுகளில் வசிப்பதைப் பொருட்படுத்தாமல், முன்னேற்றம் கண்டு செழிப்புடன் வாழ்வதையும் நாம் அறிவோம்.

இந்த வகையான ஏற்றதாழ்வுகள் சார்ந்த சில நிகழ்வுகளும் உள்ளன. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரதிநிதித்துவ விசயம் என்னவெனில், வாழ்க்கை தந்த சிறந்த வளத்தையும் செல்வத்தையும் அனுபவித்த தந்தையினுடையதுதான். ஆனால், மகன் அதே வீட்டில் வசித்தாலும், தலைமகனாக வீட்டுப் பொறுப்பை ஏற்கத் தயாராகும் பொழுது, அதே போல வளம் பெறுவதில் தோல்வி அடைகிறார். ‘முன்கதவு’ அமைப்பு தொடர்பாக வாஸ்து சமச்சீரற்ற தன்மையின் இந்த வகையான ‘மாறுபாடுமிக்க’ சம்பவத்திற்கு விளக்கம் தருவது மிகக் கடினம். முன்கதவு எப்படி இங்கு குற்றவாளி ஆனது?

நுழைவாயில்மற்றும் முன்கதவுக்காக சிறந்த வாஸ்துவைப் பெறுங்கள்

சரல் வாஸ்துபடி, ஒருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில், ஒருவருக்குப் பொருத்தமான சாதக திசைகள் முடிவு செய்யப்படுகின்றன.

முன்கதவு வாஸ்து அமைப்புக்காக கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்:

  • முன்கதவுக்கு அருகில் எப்பொழுதும் ஒரு குப்பைக் கூடையை வைப்பதைத் தவிர்க்கவும்.
  • முன்கதவு இருளடைந்து இருக்கக்கூடாது. அந்த இடம் எப்பொழுதும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்.
  • முன் நுழைவாயிலை குப்பை கூளங்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும். அதன் சூழல் நேர்மறை ஆற்றலை உள்வாங்குமாறு அமைக்கப்பட வேண்டும்.
  • முன்கதவை ஓம், ஸ்வஸ்திக் அல்லது மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கவும். ஊதுபத்திகள் நேர்மறை ஆற்றலை உற்பத்தி செய்ய உதவும்.
  • முன்கதவு ஒரு கோயிலை நோக்கி அல்லது யாரும் வசிக்காத கட்டிடத்தை நோக்கி அமைக்கப்பட்டிருக்கக் கூடாது. ஏனெனில் அது எதிர்மறை ஆற்றலை உங்கள் வீட்டினுள் கொண்டு வந்து விடும்.
    முன்கதவை அடைத்திருக்குமாறு எந்தச் சுவரும் அங்கு இருக்கக் கூடாது. அது உங்கள் வீட்டினுள் ஆற்றலை பரவுவதைத் தடுத்து விடும்.
  • வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீடு அல்லது ஏதேனும் இடத்தின் முன்கதவு அந்த இடத்தில் வசிக்கும் அல்லது பணிபுரிபவர்களின் வாழ்க்கை மீது குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்துகிறது. முன்கதவு சம்பந்தமான முக்கியமான விசயம் என்னவெனில், முன்கதவு அமைந்திருக்கும் திசை. முன்கதவுக்குச் சாத்தியமுள்ள 8 திசைகள் உள்ளன. ஒவ்வொரு திசையும் பிறந்த தேதி மற்றும் பாலினத்தைப் பொறுத்து ஒரு சிலருக்கு சாதகமாக அமையும், ஒரு சிலருக்கு சாதகமற்றதாக அமையும்.

முன்கதவின் திசை

வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீடு அல்லது ஏதேனும் இடத்தின் முன்கதவு அந்த இடத்தில் வசிக்கும் அல்லது பணிபுரிபவர்களின் வாழ்க்கை மீது குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்துகிறது. முன்கதவு சம்பந்தமான முக்கியமான விசயம் என்னவெனில், முன்கதவு அமைந்திருக்கும் திசை. முன்கதவுக்குச் சாத்தியமுள்ள 8 திசைகள் உள்ளன. ஒவ்வொரு திசையும் பிறந்த தேதி மற்றும் பாலினத்தைப் பொறுத்து ஒரு சிலருக்கு சாதகமாக அமையும், ஒரு சிலருக்கு சாதகமற்றதாக அமையும்.