உங்கள் கழிப்பறை மற்றும் குளியல் அறை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலூத்துகிறது?
vastu-for-bedroom

வாஸ்து கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் ஒரு வீடு அதில் வசிப்பவருக்கு மன அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய ஆரோக்கியமான, தடைகளற்ற வீட்டை வழங்குகிறது. குளியல் அறை என்பது ஒரு வீட்டின் மிக இன்றியமையாத பகுதிகளில் ஒன்றாக உள்ளது. அது ஒரு வீட்டின் ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்தால், அது எதிர்மறை ஆற்றலை உள்ளே அனுமதித்து விடும். வாஸ்து கோட்பாடுகளின்படி அது ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலை சம்பந்தமான சிக்கல்களுக்கு வழி வகுக்கிறது. சரல் வாஸ்து முறைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது, இந்தப் பகுதிகள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை ஊக்கப்படுத்துவதை கழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து விளக்குகிறது.

கழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்துவிலிருந்து நாம் அதை எதிர்பார்க்க முடியும்?

நமது மூதாதையர்களும், முன்னோர்களும் வீட்டுக்கு வெளிப்புறங்களில் அமைந்த கழிப்பறை வசதி கொண்ட வீடுகளில் வசித்து வந்தார்கள். ஏனென்றால், அது எதிர்மறை ஆற்றலை உற்பத்தி செய்கிறது. தங்கள் வாழ்க்கை மீது கவிழும் எதிர்மறை ஆற்றலிலிருந்து வசிப்பவர்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக அவ்வாறு வாழ்ந்து வந்தார்கள். இது கழிப்பறை மற்றும் குளியல் அறைக்கான வாஸ்து கோட்பாட்டின் கீழும் அவ்வாறே வருகிறது. ஆனால் இன்று நாம் அதற்கு நேர் எதிராகச் செய்து வருகிறோம். ’இணைப்பு கழிப்பறை மற்றும் குளியல் அறைகள்’ ஒரு வரையறையாக உள்ள பெரிய தனிப்பட்ட வீடுகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, வசதிக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் வீட்டினுள்ளேயே கழிப்பறைகளையும் துவைக்கும் அறைகளையும் நாம் கட்டமைத்து இருக்கிறோம்.

இந்த அணுகுமுறையை மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

நடைமுறைரீதியான, நிதர்சனமான அணுகுமுறையின் அடிப்படையில், பொருத்தமான திசையில் கழிப்பறைகளும் துவைக்கும் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தால், அது துரதிர்ஷ்டத்தைத் தருவதில்லை என நம்பப்படுவதற்கான காரணங்கள் உள்ளதாக கழிப்பறை மற்றும் குளியறைக்கான வாஸ்து நிரூபிக்கிறது. எந்தக் கட்டமைப்பாக இருந்தாலும் வாஸ்து நிலைமையைப் பாதிக்கக்கூடிய பிறந்த தேதி அடிப்படையில் ஒவ்வொருவரும் நான்கு அதிர்ஷ்டகரமான திசைகளையும் நான்கு துரதிர்ஷ்டமான திசைகளையும் பெற்றிருக்கிறோம் எனும் உண்மை தொடர்பாக நான் அனைவருக்கும் முன்னர் கூறியதைத் திரும்ப நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த விதமான கட்டுமான உடைபாடுகளும் புதுப்பித்தல்களும் இல்லாமல், சரல் வாஸ்து கருத்து மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில், நமது வீடுகளிலும் பணியிடங்களிலும் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ளவும், எதிர்மறை ஆற்றலைத் தணிக்கச் செய்யவும் முடியும். அதன் மூலம் நாமும் நமது குடும்ப உறுப்பினர்களும், தற்கால வாழ்க்கைச் சூழல் நம் மீது சுமத்தும் நெருக்கடிமிக்க வாழ்க்கைப் பாணிக்கு மாற்றாக, ஒரு ‘வாழத்தக்க வாழ்க்கைப் பாணியுடன்’ கூடிய ஆரோக்கியமான, நிம்மதியான, திருப்திகரமான, அர்த்தம் பொதிந்த வாழ்க்கையைப் பெற முடியும்.