ஒரு தொழில் துவங்குவது என்பது ஒருவருடைய வாழ்வில் மிக முக்கியமான கால கட்டங்களில் ஒன்று. ஒவ்வொரு இளைஞரும் தங்கள் படிப்பை முடித்தவுடன், தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் சம்பாதிப்பதற்காக தங்கள் கல்வித் தகுதியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். அதிர்ஷ்டமிக்கவர்களில் ஒரு சிலர் மட்டும் தொழிலதிபர்களாகவோ அல்லது தங்கள் குடும்பத் தொழிலை மேற்கொண்டு நடத்தவோ விரும்புவார்கள்.
ஒவ்வொரு வீடும் பணியிடமும் ஒரு தொழில் ஸ்தானத்தைப் பெற்றுள்ளது. தொழில் ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது, தொழிலில் தன்னிச்சையாக ஒரு சிக்கல் எழுகிறது. வீடு அல்லது பணியிடத்தின் முன் கதவு அல்லது நுழைவாயில் சாதகமற்ற திசையில்அமைந்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட வழியில் தொழில் வளர்ச்சியையும் பாதிக்கிறது. வேலையின்மை, சம்பள உயர்வு இல்லாதது, பதவி உயர்வு கிடைக்காதது மற்றும் மேலாளருடனும் குழு உறுப்பினர்களுடனும் மோதல் போன்றவை நிகழும்.