மனிதர்கள் நேர்மறை ஆற்றலால் சூழப்பட்டிருக்கும் பொழுதும், தங்களுக்குச் சாதகமான திசைகளைப் பின்பற்றும் பொழுதும், தொடர்ச்சியான மகிழ்ச்சிமிக்க வாழ்க்கைக்காக 7 சக்கரங்கள் நெறிப்படுத்தப்பட்டு, ஆற்றல் அளிக்கப்படுகிறது. 7 சக்கரங்களையும் திறந்து, ஒரு ஆரோக்கியமான ஆற்றல் ஓட்டத்தை அனுமதிப்பது என்பது சமநிலையுடன் இருப்பதற்கும், சிறந்த ஆரோக்கியம் மற்றும் நேர்மறை எண்ணங்களைப் பேணுவதற்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவி ஆகும். சக்கரங்கள் ஆற்றலை உருமாற்றுபவை. பல்வேறு நிறங்களின் மின் ஆற்றலுக்கு சுழற்சி சக்கரங்களாக இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. நமது ஆற்றல் தளம், உடல் மற்றும் பரந்த பிரபஞ்ச ஆற்றல் தளத்தையும் இணைக்கக்கூடிய பலவிதமான செயல்பாடுகளை அவை நிகழ்த்துகின்றன.
7 சக்கரங்கள் நேரடியாக நாளமில்லா அமைப்புமுறையுடன் இணைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. அதன் விளைவாக நமது வயது முதிர்ச்சி அடையும் செயல்முறையை ஒழுங்குபடுத்துகின்றன. அனத் 7 சக்கரங்கள் பெளதீக உடலிலும் பல்வேறு மட்ட உள்ளொளி தளங்கள் மற்றும் பிரபஞ்ச சக்திகளிலும் உள்ளொளி தளத்திற்கும் மெரிடியன் அமைப்பு முறைக்கும் இடையே இணைப்புச் சாதனங்களாக உள்ளன. அவை பெளதீக உடலில் உள்ள ஆற்றலின் ஓட்டத்தைப் பாதிக்கின்றன. அவை காற்று மண்டலத்திலிருந்து முதன்மையான ஆற்றலை உள்வாங்கி, ஆற்றல் வழியாக அனுப்புகின்றன.
நமது உடலில் உள்ள 7 சக்கரங்களும், நமது வாழ்க்கை மீது அவற்றின் ஆதிக்கமும்.
சஹஸ்ரரா சக்கரம்

சஹஸ்ரரா சக்கரம் ”கிரீடச் சக்கரம்” என அழைக்கப்படுகிறது. அது தலை மற்றும் மூளைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் அது முதலாவது சக்கரமாகும். சஹஸ்ரரா சக்கரம் தூண்டப்படவில்லை எனில், மன அழுத்தம், பர்க்கின்சன்ஸ் வியாதி, மனச் சிதைவு நோய், வலிப்பு நோய், முதுமைக்குரிய டிமென்சியா, அல்சீமர் நோய், மனநிலை பாதிப்பு, குழப்பம் மற்றும் தலைச் சுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு அது வழி வகுக்கும்.
ஆஜ்னா சக்கரம்

ஆஜ்னா சக்கரம் “புருவச் சக்கரம்” என அழைக்கப்படுகிறது. அது நெற்றியின் மையத்தில் அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் இது இரண்டாவது சக்கரமாகும். நமது ஆஜ்னா சக்கரம் தூண்டப்படவில்லை எனில், பதற்றம், மன அழுத்தம், தலைவலி, ஒற்றைத் தலைவலி, பார்வைக் குறைபாடுகள், பக்கப் பார்வைக் குறைபாடுகள், தூரப் பார்வைக் குறைபாடுகள், கிளக்கோமா, கண்புரை நோய், சைனஸ் பிரச்சினைகள், காதுப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
விசுதா சக்கரம்

விசுதா சக்கரம் “தொண்டைச் சக்கரம்” என அழைக்கப்படுகிறது. அது தொண்டை மற்றும் நுரையீரல் பகுதியில் அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் இது மூன்றாவது சக்கரமாகும். விசுதா சக்கரம் தூண்டப்படவில்லை எனில், தைராய்ட் பிரச்சினை, சுறுசுறுப்பின்மை, அதிக படபடப்பு, பசியில்லாத மன நோய் (இது ஒரு பன்முகச் சக்கரப் பிரச்சினை, ஆனால், தொண்டைச் சக்கரத்திற்கு நெருங்கிய தொடர்புள்ளது), ஆஸ்த்மா, மூச்சுக் குழாய் அழற்சி, காதுப் பிரச்சினை மற்றும் காது இரைச்சல் பிரச்சினைகளுக்கு இது வழி வகுக்கும். செரிமானப் பிரச்சினை, வாய்ப் புண்கள், தொண்டைப் புண, அடி நாக்குப் பிரச்சினை போன்ற புருவச் சக்கரத்துடனான பிரச்சினைகளுக்கும் இது தொடர்புள்ளது.
அநாஹட்டா சக்கரம்

அநாஹட்டா சக்கரம் “இதயச் சக்கரம்” எனவும் அறியப்படுகிறது. அது இதயப் பகுதியில் அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் இது நான்காவது சக்கரமாகும். நமது அநாஹட்டா சக்கரம் தூண்டப்படவில்லை எனில், இதயப் பிரச்சினை, தசை வலி, நாட்பட்ட சோர்வு நோய்க்குறி என சில சமயங்களில் குறிப்பிடப்படும் என்செப்பாலமிலிட்டிஸ் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியின்மை, நோய் எதிர்ப்பு அமைப்பில் பல குறைபாடுகள், ஒவ்வாமை, மார்புப் புற்று நோய் போன்ற பல பிரச்சினைகளுக்கு இது வழி வகுக்கும்.
மணிப்பூர சக்கரம்

மணிப்பூரச் சக்கரம் “சூரியப் பின்னல் சக்கரம்” எனவும் அறியப்படுகிறது. அது கல்லீரல், மண்ணீரல் மற்றும் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் இது ஐந்தாவது சக்கரமாகும். மணிப்பூர சக்கரம் தூண்டப்படவில்லை எனில், நீரிழிவு, கணைய அழற்சி, கல்லீரல் நோய், வயிற்றுப் புண், வலி நோய், பித்தப் பை கற்கள் முதலிய பிரச்சினைகளுக்கு அது வழி வகுக்கும்.
ஸ்வாதிஸ்தான சக்கரம்

ஸ்வாதிஸ்தான சக்கரம் ”நாரி சக்கரம்” என அறியப்படுகிறது. அது கருப்பை, பெருங்குடல், ப்ராஸ்டேட், விரைகள் மற்றும் கருப்பை பகுதியில் அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் இது ஆறாவது சக்கரமாகும். நமது ஸ்வாதிஸ்தான சக்கரம் தூண்டப்படவில்லை எனில், மாத விடாய் பிரச்சினை, கருப்பை நார்த் திசுக் கட்டிகள், கருப்பை நீர்க் கட்டிகள், எரிச்சல் மிக்க குடல் நோய், எண்டோமெட்ரியோசிஸ், விரைச் சிரை நோய், ப்ராஸ்டேட் நோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.
மூலாதார சக்கரம்

மூலாதார சக்கரம் “அடிப்படைச் சக்கரம்” என அறியப்படுகிறது. இது முதுகெலும்பு அடிப் பகுதியில் அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் இது ஏழாவது மற்றும் இறுதிச் சக்கரமாகும். நமது மூலாதார சக்கரம் தூண்டப்படவில்லை எனில், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, மூல நோய், பெருங்குடல் அழற்சி, க்ரோன் நோய், குளிர்ந்த கைவிரல் மற்றும் கால் விரல் பிரச்சினை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், மலடு, இடுப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அது வழி வகுக்கும்.