உங்கள் கார்ப்பரேட் நிறுவனத்தின் மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது ?
saral-vastu-corporates

வியாபார, வணிக உலகம் ஒட்டு மொத்தமாக இலாபத்தையே சார்ந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம், மிகக் கடுமையான சூழலிலும் கூட தொழிலில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதுதான். தொழிலதிபர்கள், குறிப்பாக முதன் முதலாகத் தொழில் தொடங்குபவர்கள், தங்கள் திட்டத்திற்கு போதுமான வளமான ஆதாரங்களைத் தேடிக் கண்டடைவது மிகக் கடினம். அப்படி அவர்கள் அதில் வெற்றியடைந்தாலும் கூட, தொடக்கத்தில் இலாப நட்டத்திற்கு அப்பால், வியாபார, உயர் விகித வட்டிக்காக பணிபுரிவது அவர்களுக்கு கடினமான பணியாகும். அவர்களிடம் உள்ள அச்சம், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை தினசரி அடிப்படையில் அவர்களை அடையாளம் காண உதவும் சில பண்புகளாகும். சரல் வாஸ்து கொள்கைகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக அவர்களுக்கு ஒரு பொன்னான வரவேற்பு அல்லது அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்களுடைய பணியிடம் அல்லது நிறுவனம் (தொழிற்சாலை) போன்றவற்றின் முறையான ஆய்வு நிச்சயமாக, சந்தேகமில்லாமல் வெற்றிக்குத் தேவையான உத்தரவாதத்தை சரல் வாஸ்து கொள்கைகளின் பயன்பாடு மூலமாக வழங்கும்.

ஒரு சுறுசுறுப்பான பணிச் சூழலுக்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வாஸ்து

நிறுவனத்தில் துறைகளின் அமைப்பு, இயக்குநர்களின் இருக்கை அமைப்பு மற்றும் முக்கிய அதிகாரிகளின் திசைகளின் நிலை போன்ற சிக்கலான அம்சங்களின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், குறிப்பிடத்தக்க நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர, சரல் வாஸ்து நிறுவனங்களுக்கான சிறந்த வாஸ்துவை வழங்குகிறது.

தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் தற்போதைய அமைவிடத்தில் எவ்விதமான கட்டுமான மாற்றங்களும் மறு கட்டமைப்பும் செய்யாமல், பணியிடத்தின் அல்லது தொழிற்சாலையின் பணிபுரியும் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அந்த வளாகத்தில், முக்கியமான பகுதிகளுக்காக, சாதகமான திசைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். முக்கிய அலுவலர்களின் இருக்கை அமைப்பு, நிதித்துறை, மனித வளத் துறை, வாடிக்கையாளர் சேவைத் துறை போன்ற முக்கியத் துறைகளின் அமைவிடம் நிறுவனங்களுக்கான வாஸ்து கொள்கைகளின்படி அமைக்கப்பட வேண்டும். இது அலுவலகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய ஆற்றல் பகுதிகளின் மீது கவனம் செலுத்துகிறது. அங்கு மிகத் துடிப்பான, சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான பணிச் சூழலை வழங்குவதற்காக நேர்மறை அலைகள் பாய்கின்றன. சுறுசுறுப்பான பணிச் சூழல் மனித வளத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்கிறது. அதன் விளைவாக நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள உற்பத்திப் பொருள்களையும் சேவைகளையும் வழங்க வழி வகுக்கிறது.