உங்கள் கல்வி மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

Vastu For Education

குரல் வளையை நெறிக்கும் போட்டி மிகுந்த இன்றைய உலகில், ஒவ்வொரு பெற்றோரும் பாதுகாவலரும் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி வாய்ப்பு பற்றி உண்மையில் அதிகமாகக் கவலை கொள்கின்றனர். ஒவ்வொரு மாணவரும் அதிக மதிப்பெண் பெறவே விரும்புகின்றனர். அதன் மூலம் தேர்வுகளில் சிறப்பான முறையில் வெற்றி பெறவும், அல்லது உயர் கல்விக்காக சிறந்த பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் சேரவும் முடியும். இந்த எலிப் பந்தயத்தில், பலர் தங்கள் விரும்பிய நிலையை அடைகின்றனர் அல்லது பலர் வெற்றி பெற முடிவதில்லை, சில வேளைகளில் மிகுந்த துன்பமான நிலையில் தோல்வியைத் தழுவுகின்றனர்.

அதன் விளைவாக தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை எண்ணத்தாலும், மன அழுத்தத்தாலும், உறக்கமற்ற நிலையிலும், உதவியற்ற உணர்விலும் தவிக்கின்றனர். கல்வியில் முடிந்த அளவு முழு வெற்றி என்பது எந்த படிப்பு பயிலும் மாணவருக்கும் ஒரு குறிக்கோள், அதுவே இலட்சியமும் கூட.

வீடு மற்றும் பணியிடத்தில் கல்விச் சிக்கல்கள்

ஒவ்வொரு வீடும், பணியிடமும் ஒரு ‘கல்வி கற்கும் இடத்தைப்’ பெற்றுள்ளது. சில சமயங்களில், வீடு அல்லது பணியிடத்தில் கற்கும் இடம் இல்லாமல் போகலாம். ஒரு வீட்டில் கல்வி கற்கும் இடம் இருந்தாலும் கூட, அது குளியலறை, கழிப்பறை மற்றும் பயன்பாட்டு அறைகளின் காரணமாக அடைபட்டிருக்கக்கூடும். தன்னிச்சையாக கல்விச் சிக்கல்கள் தலை எடுக்கத் துவங்கும். குழந்தைகள் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.

ஒவ்வொரு வீடும், பணியிடமும் ஒரு கல்வி கற்கும் இடத்தைப் பெற்றுள்ளது. கற்கும் இடம் பாதிக்கப்பட்டிருந்தால், தன்னிச்சையாக குழந்தைகளின் கல்வி நிலையில் சிக்கல்கள் எழும்.

குழந்தைகள் கவனக் குறைவாக சாதகமற்ற திசையைப் பின்பற்றும் பொழுது, 7 சக்கரங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். அது கல்விச் சிக்கல்கள், கல்வியில் கவனமின்மை, ஞாபக மறதி, மன அழுத்தம் போன்றவற்றிற்கு வழி வகுக்கும்.

கல்வி பயிலும் முறை அல்லது வீட்டுப்பாட முறைகள் பாதிக்கப்படும். எவ்வளவு முயன்று படித்தாலும் வெற்றி பெற முடியாமல் போகலாம்.

படிக்கும் குழந்தைகள் அவர்கள் பயின்றதை தேர்வு சமயங்களில் நினைவு கூற முடியாமல் போகலாம்.

குழந்தைகள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். அவர்களுடைய நினைவாற்றல் குறையக் கூடும்.

குழந்தைகளுக்குத் தங்கள் பாடங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் கூட, தமது அறிவையும் ஞானத்தையும் பயன்படுத்த முடியாமல் போகலாம். அது வாழ்வாதார இழப்புக்கும், மேலதிகாரிகளின் ஆதரவின்மையால் வேலை இழப்புக்கும் வழி வகுக்கும்.

வீட்டுக் குழந்தைகளும் மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெற சரல் வாஸ்து எவ்வாறு உதவுகிறது?

எவ்விதக் கட்டுமான உடைபாடுகளும் மாற்றங்களும் செய்யாமல், வீட்டில் அல்லது பணியிடத்தில் பாதிக்கப்பட்ட கல்வி கற்கும் இடத்திற்காக சரல் வாஸ்து தீர்வுகளை வழங்குகிறது.

சரல் வாஸ்து கவனக்குவிப்பையும் நினைவாற்றலையும் மேம்படுத்த ‘சிறந்த கல்வி திசையையும்’ ‘சிறந்த உறக்கநிலை திசையையும்’ அறிவுறுத்துகிறது.

மூளையின் ‘நினைவாற்றல்’ கூட 7 சக்கரங்களைத் தூண்டி விடுவதால் மேம்படுகிறது. குழந்தைகள் முழு கவனத்துடன் 2-3 மணி நேரம் தொடர்ச்சியாக அமர்ந்து படிக்கவும், பாடங்களின் முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ளவும் முடிகிறது.