உங்கள் படுக்கை அறை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?
Vastu Shastra For Bedroom

படுக்கை அறையை அமைப்பதிலும் திட்டமிடுவதிலும் வாஸ்து பெருமளவு விளக்கம் தருகிறது. வெவ்வேறு திசைகளில் உங்கள் தலையை வைத்து நீங்கள் ஓய்வெடுப்பதும் உங்கள் படுக்கையை அமைப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விருப்பம். அது அதிக கவனத்துடன் சரியான முறையில் இருக்க வேண்டும். உங்கள் படுக்கை அறையில் அமைதியும் அதன் மூலம் வெற்றியும் பெற நீங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டிய சில அடிப்படைச் செயல்பாடுகள் இங்கே தரப்பட்டுள்ளன.

படுக்கை அறைக்கான வாஸ்துவைப் பின்பற்றி உங்களுக்குச் சாதகமான திசையில் உறங்குதல்

உறக்கம் என்பது உடல் மற்றும் ஆன்மா முழுமையான ஓய்வு பெறும் கலை. “உலகத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக விடுபடும்” நேரம் ஒரு அமைதியான, ஸ்திரத்தன்மைமிக்க வழியில் நினைத்துப் பார்க்க முடியாத பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. இந்தச் செயல்முறை ஒரு அறையிலிருந்து துவங்குகிறது. படுக்கை அறை என்பது ஒட்டுமொத்த நிம்மதி மற்றும் பாதுகாப்பிற்கான இடம்.

படுக்கை அறைக்கான வாஸ்து ஆழ்ந்த உறக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. அது கவலையற்ற வாழ்க்கைக்கு இன்றியமையாத அம்சமாகும். அறைகளைக் கட்டமைப்பதிலும் வரைபடம் தயாரிப்பதிலும் பல காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.

எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

 • படுக்கை அறைச் சுவரின் நிறங்கள்
 • படுக்கை அமைப்பு
 • மரச்சாமான்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் வைக்கப்படும் திசைகள்

படுக்கை அறைக்கான வாஸ்து மற்றும் அதற்கான தீர்வுகள் எவை?

 • மன அமைதியையும் சுமுகத்தன்மையையும் அனுபவிக்க ஏதுவாக படுக்கை அறை கட்டமைக்கப்பட வேண்டும்.
 • படுக்கை அறையில் தெய்வங்களின் சிலைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • படுக்கை அறையில் பூஜாகர் (வழிபாட்டு இடம்) வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • நிம்மதி மற்றும் ஒத்திசைவுகளைப் பெற, சதுரம் மற்றும் செவ்வக வடிவத்தில படுக்கை அறைகளை அமைப்பது பொருத்தமானதாகும்.
 • நீங்கள் தலை வைத்து உறங்கும் நிலை உங்களுக்கு மிகச் சாதகமான திசையில் இருக்க வேண்டும் என வாஸ்து அறிவுறுத்துகிறது.
 • படுக்கை அறைக்கான வாஸ்து அடர்த்தி குறைவான, இனிமையான நிறங்களை முன்மொழிகிறது.
 • உங்கள் படுக்கைக்கு எதிரில் ஒரு நிலைக் கண்ணாடியைப் பொருத்தி வைப்பது, உங்களை படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கிறது.
 • படுக்கை அறையில் ஒரு மீன் தொட்டி அல்லது தாவரங்களை வைத்து பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 • உங்கள் படுக்கை அறையில் மென்மையான, இனிமையான ஒளி பரவி இருக்குமாறு அமைக்க வேண்டும்.
 • உங்கள் படுக்கை அறையின் மூலையில் ஜன்னல்கள் அல்லது நுழைவாயில் இருக்கக் கூடாது; அது நேர்மறை ஆற்றலை உள்வாங்கி, வீட்டில் உள்ள எதிர்மறைத் தன்மைகளை வெளியேற்றுகிறது.

சரல் வாஸ்து உதவியுடன், படுக்கை அறைக்கான சிறந்த வாஸ்து ஆலோசனைகளைப் பெற்றும், 7 சக்கரங்களைத் தூண்டியும் குடும்பத்தில் இசைவான உறவுமுறைகளை மேம்படுத்தவும்.