டாக்டர். சந்திரசேகர் குருஜி

நமது நிறுவனர், அறிவுரையாளர், தொலைநோக்குப் பார்வையாளர் மற்றும் கொடையாளர்

“கனவுகள் என்பவை நீங்கள் உறங்கும்போது கண்பதல்ல, உங்களை உறங்கவிடாமல் செய்வது.” – டாக்டர். ஏபீஜே. அப்துல் கலாம்.

சரல் வாஸ்துவைக் கண்டறிந்தவரும் அதன் பின்னிருக்கும் சக்தியுமான நமது பெருமதிப்புக்குரிய, டாக்டர். சந்திரசேகர் அங்காடியைபற்றி (குருஜி) இவ்வாறு குறிப்பிடப்படுவது நிஜமாகவே பொருத்தமானது.

தனது குழந்தைப் பருவத்திலிருந்து, குருஜி மனித இனம் சந்திக்கும் சவால்கள் மீது எப்போதுமே ஈர்க்கப்பட்டு அவற்றின்பால் மனவருத்தம் கொண்டவராக இருந்தார். 8 வயதான இளம் சிறுவனாக இருந்தபோது, தனது பாட்டனாரால் கட்டப்பட்ட, இந்தியாவிலுள்ள ஒரு பழைய கோவிலைப் புனரமைப்பதற்கு வழிசெய்ய மக்களிடம் நன்கொடை வசூலிக்கும் ஒரு சுயநலமற்ற பணியை மேற்கொண்டிருந்தார். அவரது நோக்கம், ஒரு சமயத்தில் நேர்மறை சக்தி பிரவகித்து ரீங்காரம் செய்யும் இடமாக இருந்த அந்தக் கோவிலைப் புனரமைப்பதன் மூலம் தனது ஊரில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷத்தை வரவழைப்பதே.

தனது 14வது வயதில், மீண்டும், ஒரு பதின் பருவத்தினனாக, தன் வாழ்க்கையைத் தகுதியுடையதாக்கிக்கொள்ளும் வழிகள் பற்றிய எண்ணங்கள் அவரது மனதில் வரத் துவங்கின. அப்பொதுதான் அவர் இராணுவத்தில் சேர முடிவு செய்தார். இரண்டு முறை முயன்ற அவர் மருத்துவக் காரணங்களால் தேர்வு செய்யப்படவில்லை.
இது அவரது எண்ணங்களைப் பாதிக்கவில்லை. மும்பையில் ஒரு கட்டிட கான்ட்ராக்டராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1995ல் ஏழ்மையான மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் “ஷரன் சங்குலா ட்ரஸ்ட்டைத்” துவக்கினார். அவரே அந்த ட்ரஸ்ட்டின் நிறுவனராகவும் அறங்காவலராகவும் இருக்கிறார்.

அவர் ஒரு மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர், ஒரு கட்டிடப் பொறியாளராக ஆனதற்குப் பிறகு, மும்பையில் ஒரு கட்டிட கான்ட்ராக்டராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி, தான் தேர்வு செய்த துறையில் வெற்றியும் பெற்றார். அவர் தனக்கு உண்மையாக இருந்து தனது தொழில் வாழ்க்கையில் நேர்மையான பாதையில் செல்லத் தொடங்கினார். தனது தொழிலில் அவர் நஷ்டமடைந்தார்; தன் தொழில் கூட்டாளிகளுக்குக் கொடுத்த பணம் மாட்டிக்கொள்ள அவர் தனது கூட்டாளிகளால் ஏமாற்றப்பட்டார். இது அவரது சூழ்நிலையிலிருக்கும் நம்மில் பெரும்பாலானோரைப் போலவே, அவரது மனதை வாட்டத் துவங்கியது. அந்த நிலைமைகளுக்காக அவர் மற்றவர்களைப் பழிக்காமல், தொழிலில் தான் சந்திக்கும், தனக்கு மன உளைச்சலை தந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கான காரணங்களைப் பற்றித் தன்னுள் ஆய்வு செய்யத் துவங்கினார்.

1998ன் மத்தியில், அவரது கனவுகளில் தன் வீட்டின் அமைப்பையும் ஒரு கவராயத்தையும் (compass) காணத் தொடங்கினார். ஒரு காலகட்டத்துக்கு தொடர்ந்து அவர் ஒரே கனவை காணத் துவங்க, இப்போதுதான் அவர் வாழ்க்கையில் தான் அனுபவித்துக் கொண்டிருப்பவைகளுக்கும் தனது கனவுகளில் தான் கண்டுகொண்டிருப்பதற்கும் உள்ள தொடர்பை உணர ஆரம்பித்தார்.

இது, அவரது பிரச்சனைகளின் காரணம் அவரது வீடு மற்றும் பணியிடத்திலேயே இருக்கிறது என்பதை அவர் உணரத் துவங்கியதில் கொண்டு சேர்த்தது. இதுவே அவரது பயணத்தின் துவக்கம். அவர் அந்த விஷயத்தின் ஆழத்துக்கு செல்லத் தொடங்கி, நமது முன்னோர்கள் தங்களது அறிவையும் ஆதாரவளங்களையும் ஒருங்கிணைத்து, காலத்தின் சூறையாடல்களை வலிமையாய் எதிர்கொண்டு என்றும் நிலைத்திருக்கும் அழகிய நினைவுச்சின்னங்களை எழுப்பிய விதம் குறித்த கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளத் துவங்கினார்.

அவருக்கு நேர்ந்த, வெற்றிக்களிப்பு தந்த அந்தத் தருணமே, அவர் நெடுங்காலமாக தன் ஆராய்ச்சியின் மூலம் கருக்கொண்டு, மேம்படுத்தி முறைமைப்படுத்திய அறிவியலான “சரல் வாஸ்து”. அது தொன்மையான இந்திய கலாசாரம் மற்றும் கட்டுமானவியல் அடிப்படையிலான ஒரு தனித்துவ, அறிவியல்பூர்வமான தீர்வாகும். அதைக் கடைப்பிடிக்கும் ஒரு தனிமனிதரின் மற்றும் அவரது குடும்ப வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் அது சந்தோஷத்தையும் வெற்றியையும் கொண்டுவரும்.

குருஜியின் ஐந்து கொள்கைகள்

ஒரு இளம், சக்தி வாய்ந்த சந்திரசேகராக இருந்து ஒரு கொடையாளராக, வழிகாட்டியாக, அறிவுரையாளராக மற்றும் மனித இனத்தின் குருஜியாக மாற்றம் பெறுகிறவரையில் தன் கனவை நனவாக்க அவர் விடாமுயற்சியுடன் உழைத்திருக்கிறார். இன்று அவர் இத்தகைய மனிதராக மாற வழிசெய்த இந்த ஐந்து கொள்கைகளை அவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்திருக்கிறார்.

உன் வாழ்க்கையில் யாரையும் ஏமாற்றாதே

நேர்மையாக வாழ்வது ஆன்மாவைச் சுத்திகரிக்கும் ஒரு விஷமுறிவு போன்றது. இதை மனச்சான்றுடன் பின்பற்றுபவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றும் தொழில் வாழ்க்கையிலும் தாங்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் நிறைவைத் தேடுவார்கள்.

எந்த ஏற்றமான நிலையை அடைந்தாலும் அடக்கமாக இருங்கள்

நீங்கள் வெற்றியின் சிகரத்தை அடைந்திருக்கலாம். ஆனால் எப்போதும் தன் நிலை உணர்ந்திருப்பதும் நீங்களாகவே இருப்பதும் மிக முக்கியமானது. இது புகழையும் உங்களைச் சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து விரும்பும் உதவியையும் பெறுவதை உறுதி செய்யும்.

உங்கள் பெற்றோர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருந்து அவர்களது ஆசிகளைப் பெறுங்கள்

“நம்மை அக்கறையுடன் கவனித்துக்கொண்டவர்களை, நாம் கவனித்துக்கொள்வது மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்று” என்று டியா வால்கர் பொருத்தமாகவே சொல்லியிருக்கிறார்.

உங்களை உருவாக்கியவர்களை (பெற்றோர்கள்) பேணிக்காப்பது நிலைத்த சந்தோஷத்தையும் தன்னிறைவையும் வெற்றியையும் ஒருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அருளும்.

ஏழ்மையானவர்களுக்கு உதவுங்கள்

.

தன்னலமற்ற அன்பையும் ஆதரவையும் குறிப்பாக இல்லாதவர்களுக்கு தரும்போது அபரிமிதமான நிறைவு ஈர்க்கப்படுகிறது. மிகுதியான நிறைவு மேலும் பெருகுகிறது.

மற்றவர்களை சந்தோஷப்படுத்த நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்

நமது வசிப்பிடம் மற்றும் பணியிடத்தினுள்ளிருந்தே சந்தோஷம் துவங்குகிறது. அதனால் தன்னுள் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமானது. அதுவே மற்றவர்களை சந்தோஷப்படுத்த நமக்கு உதவும்.