உலகம் முழுவதும் நேர்மறை எண்ணமும் ஆற்றலும் பரவ, வாஸ்துவை வழங்கிச் செயல்படுத்துவது,
அதன் மூலம் பல இலட்சம் மக்கள் தங்கள் சொந்த வாழ்விலும், பணிகளிலும் பயனடைய முடியும்.

சரல் வாஸ்து என்பது சி ஜி பரிவார் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகும். இது குருஜி அவர்களைத் தலைமையாகக் கொண்டது. மேலும் உலகம் முழுவதும் மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அயராது உழைக்கும் 1000-க்கும் மேற்பட்ட வல்லுனர்களைப் பெற்றுள்ளது. முழுப் பிரபஞ்சமும் எனது குடும்பம் என்பதை உணர்த்தும் ”வாசுதேவ குடும்பகம்” தத்துவத்திற்கு உண்மையாக இருக்கும் வல்லுனர் குழு அது.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சரல் வாஸ்துவை எடுத்துரைக்கும் 2000-க்கும் அதிகமான சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், கல்வி நிலையங்கள் போன்ற மேலும் பல வகையான கட்டிடங்களுக்கும் அவற்றின் உபயோகம் எவ்வாறாயினும், பொருத்தமாக இருப்பது சரல் வாஸ்து.

சரல் வாஸ்து: அனைத்து வாழ்க்கைச் சிக்கல்களுக்கும் தீர்வு காண அவசியமானது

இது நாள் வரை, சரல் வாஸ்து உலகம் முழுவதும் பல இலட்சம் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அவர்கள் தீர்வுகளைப் பெற்று, மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஆலோசனைகளைச் செயல்படுத்திய 3 – 8 மாதங்களில், சரல் வாஸ்து கொள்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் நீங்களும் உங்கள் குடும்பமும் வெற்றி காண முடியும் என உறுதி அளிக்கிறோம்.

 • ஒவ்வொரு வீடும் / அலுவலகமும் வாழ்க்கை தொடர்பான பல்வேறு பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் மிக முக்கியமானவை செல்வம், ஆரோக்கியம், தொழில், கல்வி, திருமணம் & உறவுமுறைகள்.
 • ஆற்றலுக்கும் திசைகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. அவை வெற்றிச் சிகரத்தை அடைந்து, மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தவோ அல்லது மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் வாழவோ வழி வகுக்கலாம்.

செல்வம், ஆரோக்கியம், தொழில், கல்வி, திருமணம் & உறவுமுறை சம்பந்தமான விசயங்களில் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமானது உங்கள் ஏழு சக்கரங்களின் சமநிலையற்ற தன்மை. அது சாதகமற்ற திசைகளின் பாதிப்பால் ஏற்படுவதாகும்.

மனிதர்களிடம் நேர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கும் பொழுதும், அவர்கள் தங்கள் சாதகமான திசைகளைப் பின்பற்றும் பொழுதும், தொடர்ச்சியான மகிழ்ச்சிமிக்க வாழ்க்கைக்காக ஏழு சக்கரங்கள் நெறிப்படுத்தப்பட்டு, ஆற்றல் பெறுகின்றன.

உங்கள் ஏழு சக்கரங்களைத் திறந்து, ஆரோக்கியமான ஆற்றலைப் பரவ அனுமதிப்பது, உங்களைச் சமநிலைப்படுத்தவும் சிறந்த ஆரோக்கியத்தையும் நேர்மறை எண்ணங்களையும் பேணவும் சக்திவாய்ந்த கருவியாகும். சக்கரங்கள் பல்வேறு நிறங்களின் மின் ஆற்றல்மிக்க சுழற்சி சக்கரங்களாகும். அவை நமது ஆற்றல் ஸ்தானம், உடல் மற்றும் பரந்த பிரபஞ்ச ஆற்றல் ஸ்தானம் தொடர்பான பல செயல்பாடுகளை நிகழ்த்துகின்றன.

உங்களுக்குச் சாதகமான திசைகளை நோக்கி இருக்கும் பொழுது நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைய முடியும்.

பூமி யோகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் மூன்று முக்கிய காரணிகள் (வாஸ்து)

சரல் வாஸ்து மற்றும் ஏழு சக்கரங்கள்

 • செல்வம், ஆரோக்கியம், தொழில், கல்வி, திருமணம் & உறவுமுறை சம்பந்தமான விசயங்களில் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமானது உங்கள் ஏழு சக்கரங்களின் சமநிலையற்ற தன்மை. அது சாதகமற்ற திசைகளின் பாதிப்பால் ஏற்படுவதாகும்.

 • மனிதர்களிடம் நேர்மறை ஆற்றல் சூழ்ந்திருக்கும் பொழுதும், அவர்கள் தங்கள் சாதகமான திசைகளைப் பின்பற்றும் பொழுதும், தொடர்ச்சியான மகிழ்ச்சிமிக்க வாழ்க்கைக்காக ஏழு சக்கரங்கள் நெறிப்படுத்தப்பட்டு, ஆற்றல் பெறுகின்றன.

 • உங்கள் ஏழு சக்கரங்களைத் திறந்து, ஆரோக்கியமான ஆற்றலைப் பரவ அனுமதிப்பது, உங்களைச் சமநிலைப்படுத்தவும் சிறந்த ஆரோக்கியத்தையும் நேர்மறை எண்ணங்களையும் பேணவும் சக்திவாய்ந்த கருவியாகும். சக்கரங்கள் பல்வேறு நிறங்களின் மின் ஆற்றல்மிக்க சுழற்சி சக்கரங்களாகும். அவை நமது ஆற்றல் ஸ்தானம், உடல் மற்றும் பரந்த பிரபஞ்ச ஆற்றல் ஸ்தானம் தொடர்பான பல செயல்பாடுகளை நிகழ்த்துகின்றன.

 • உங்களுக்குச் சாதகமான திசைகளை நோக்கி இருக்கும் பொழுது நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைய முடியும்.

சரல் வாஸ்து – ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது

 • சரல் வாஸ்து ஒருவருடைய வீடு (சொந்த வீடு/வாடகை வீடு) பணியிடம், வீடு/பணியிடத்தின் திசைகள் மற்றும் ஆற்றலின் வெளிப்பாடு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

 • Tமொத்தமாக எட்டு திசைகள் உள்ளன. வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகியவை முதன்மை திசைகள் என அழைக்கப்படுகின்றன. ஏதேனும் இரண்டு திசைகள் இணையும் பகுதி உபதிசை அல்லது வரிசை திசை என அறியப்படுகிறது. அவை வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு.

 • பிறந்த தேதியின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் நான்கு சாதகமான திசைகளும் நான்கு சாதகமில்லாத திசைகளும் உள்ளன.

 • ஒருவருடைய மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுடைய ஏழு சக்கரங்களும் நான்கு சாதகமான திசைகளாலும் நான்கு சாதகமில்லாத திசைகளாலும் நிர்வகிக்கப்படுகின்றன. சரல் வாஸ்து ஆற்றல் மற்றும் ஏழு சக்கரங்களின் அடிப்படை மீதான தாக்கத்தை மதிப்பிடுகிறது; மேலும் வீடு (சொந்தமானது/வாடகை வீடு) / பணியிடம் ஆகியவற்றின் திசைகளின் அடிப்படையில் கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதிகளையும் கணிக்கிறது.

 • மதிப்பீட்டின் அடிப்படையில், கட்டுமானத்தில் எவ்வித மாற்றமும் செய்யாமல் சம்பந்தப்பட்ட பகுதிகளை சாதகமானவையாக மாற்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.

 • வீடு / பணியிடத்தைப் பொறுத்தவரை திசையின் சாதகத்தன்மையை மதிப்பிட, தலைமை வகிப்பவரின் (முதன்மை ஆளுநரின்) பிறந்த தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

 • ஒவ்வொரு வீட்டிலும் / பணியிடத்திலும் சரல் வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் அமைதி, மகிழ்ச்சி, வளம், ஆரோக்கியம், கல்வி மற்றும் தொழில் வெற்றி, பழைய சட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு, குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினருக்கு சந்ததி பாக்கியம் போன்றவற்றை அடைய முடியும்.

 • எனவே, சரல் வாஸ்துவை ஏற்றுக் கொள்வதை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்பதன் மூலம் உங்கள் வாழ்வின் அனைத்து கோணங்களிலும் புகழ், வெற்றி மற்றும் மகிழ்ச்சியை அடைவதற்கான அற்புதமான பயணத்தைத் துவங்கி விட்டதால், உங்களுக்கான காலம் கனிந்து விட்டது.