நமது உடலின் எதிர்மறை ஆற்றலின் ஆதாரத்தை வெளியேற்றுவதன் மூலமாக நமது உடலின் நேர்மறை ஆற்றலை மேம்படுத்த சரல் வாஸ்து உதவுகிறது.
நம்மைச் சுற்றியுள்ள இயற்கை அல்லது சுற்றுச் சூழல் முழுவதும் ஆற்றல் நிரம்பியுள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த ஆற்றல் நேர்மறை ஆற்றல் மற்றும் எதிர்மறை ஆற்றல் என மேலும் வகைப்படுத்தப்படுகிறது. எதிர்மறை ஆற்றலின் விளைவுகளை குறைப்பதற்கு அல்லது முழுவதுமாக அகற்றி, நம்மை சுற்றிலும் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கான நடைமுறைகளை சரல் வாஸ்து செயல்படுத்துகிறது. வீட்டினுள் நேர்மறை ஆற்றல் பரவ ஏதுவாக, எளிய, ஏற்றுக் கொள்ள எளிதான, முழுமையாகப் பொருத்தமான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை சரல் வாஸ்து அறிவுறுத்துகிறது. அத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்ட ஒரு வீடு சிறந்த பயன்களை அதில் வசிப்பவர்களுக்கு வழங்குகிறது. அது சிறப்பான ஆரோக்கியம், செல்வச் செழிப்பு மற்றும் நிம்மதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது.