vastu for marriage
உங்கள் திருமணத்தின் மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒரு மிக முக்கியமான கட்டம். பாரம்பரியக் குடும்பக் கட்டமைப்பில், ஒவ்வொருவரும் ‘க்ரஹாஸ்த்ராஸ்ரம’ வாயிலாகச் செல்ல வேண்டும் அல்லது திருமண வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பது இன்றியமையாதது. ’பொருத்தமான துணையை’ தேடித் தரும் பொறுப்பு பெற்றோரையும் பாதுகாவலரையும், உறவினர்களையும் சார்ந்தது. இன்றைய கால கட்டத்தில், இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான துணையை இண்டெர்நெட், சமூக ஊடக இணைய தளங்கள், செய்தித்தாள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாகத் தேடிக் கண்டடைகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த, பொருத்தமான துணையைத் தேட முயல்கின்றனர். சில சமயங்களில் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பொருத்தமான வருங்காலத் துணையைக் கண்டடைய உறவினர்களையும் திருமண ஆலோசகர்களையும் நாடுவார்கள்.

தாமதமான திருமணங்கள் அல்லது திருமண உறவில் விரிசல்களுக்குக் காரணமான சிக்கல்களைத் தீர்ப்பதில் திருமணத்திற்கான வாஸ்துவின் முக்கியத்துவம்

ஒவ்வொரு வீடும் பணியிடமும் ஒரு உறவுமுறை இடத்தைப் பெற்றுள்ளது. அந்த உறவுமுறை இடம், டாய்லெட் அல்லது குளியலறை மற்றும் பயன்பாட்டு அறைகளால் பாதிக்கப்பட்டால், விவரிக்கப்பட்டவாறு தன்னிச்சையாக திருமண பந்தத்தை முடிவு செய்வதில் சிக்கல்கள் எழும்.

ஏதேனும் புனிதமான அல்லது பக்திமிக்க ஞானிகள் அல்லது ‘தெய்வ அவதாரங்களின்’ (பிரம்மச்சாரிகள்) படங்களை முன்னறையில் அல்லது படுக்கையறையில் சுவற்றில் தொங்க விட்டால், திருமண பந்தத்தை அமைப்பதில் உள்ள விவரிக்க முடியாத தாமதங்களையும், திருமண உறவில் ஏற்படும் விரிசல்களையும் நிவர்த்தி செய்கிறது. சரல் வாஸ்து பரிகாரங்களின்படி, படுக்கையறைக்கான வாஸ்துவைப் பின்பற்றும் பொழுது, நீங்கள் உங்கள் திருமண வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும்.

திரும்பத் திரும்ப மணப்பெண் பார்க்கும் படலம் நிகழ்ந்த போதும், பொருத்தமான துணை கிடைக்கவில்லை என்றால், மணப்பெண் பார்க்கும் படலத்தில் மணப்பெண் தன்னை அறியாமல் சாதகமற்ற திசை நோக்கி நின்றிருப்பது ஒரு காரணமாகும். அதன் விளைவாக திருமண ஒப்பந்தம் கைகூடாமல் போகக்கூடும்.

மணப்பெண்ணின் படுக்கையறை அல்லது உறங்கும் திசை சாதகமற்ற திசையாக இருந்தால், அது மணப்பெண்ணுக்கு ஆரோக்கியச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். உதாரணத்திற்கு, பொலிவிழப்பு, அல்லது உடல் பருமன்.

வெளிப்படையாக எதுவும் தவறாகத் தோன்றாத போதும் கூட, அதாவது மணப்பெண் பார்க்க இலட்சணமாகவும், நன்கு படித்தவராகவும், அந்தஸ்துமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், மணமகனுக்குப் பொருத்தமானவராகவும், அதே போல மணமகனும் நல்ல வேலையில் உள்ளவராகவும் அந்தஸ்துமிக்க குடும்பப் பின்னணி கொண்டவராகவும் இருந்த போதும் கூட, பொருத்தமான வாழ்க்கைத் துணைவர்களாக இல்லாமல் போக வாய்ப்புண்டு.

மணமகள் மற்றும் மணமகனின் ‘ஜனம்பத்ரிஸ்’, ‘குண்டலிஸ்’ மற்றும் ஜாதகம் ஆகியவை மிகக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கலாம். ஆனால் திருமணப் பேச்சு வார்த்தையின் இறுதிக் கட்டத்தில், விவரிக்க முடியாத தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பல விதங்களில் வாய்ப்புள்ள மணமகனும் அவர் குடும்பத்தினரும் மணமகளின் வீட்டிற்குச் சென்று வந்த வண்ணம் இருப்பர். ஆனால், கடைசி நேரத்தில், துவக்க நிலை ஏற்புகளுக்குப் பிறகும் கூட, விவரிக்க முடியாத காரணங்களால் மணமகனின் குடும்பத்தினரை குழப்பத்தில் ஆழ்த்தி, திருமணப் பேச்சு வார்த்தையின் இறுதிக் கட்டம் சிக்கலில் விழக்கூடும்.

திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் கூட, வரதட்சிணை அல்லது மணமகன் வீட்டாரின் வேறு வகையான கோரிக்கைகள் திருமணத்தை நடத்த முடியாத நிலைமைக்குத் தள்ளிவிடுகிறது.

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மாறாக, ’புதிய யுக விழிப்புணர்வு’ பெற்ற மாப்பிள்ளையும் பெண்ணும் ‘காதல் திருமணம்’ செய்வது அல்லது திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் ஏற்பாடாக ‘ஒன்றாக வாழ்தல்’ போன்றவற்றிலும் ஒரு வகையான வெறுப்புணர்வு ஏற்படுகிறது.

திருமணம் தொடர்பான சிக்கல்களில் சரல் வாஸ்து எவ்வாறு உதவுகிறது?

திருமணத்திற்கான வாஸ்துக்காக சரல் வாஸ்து உதவிகரமான, எளிய தீர்வுகளை வழங்குகிறது. அது வீடு அல்லது அலுவலகங்களில் எவ்விதமான கட்டுமான உடைபாடுகளும் மாற்றங்களும் இல்லாமல், நேர்மறை ஆற்றலை ஒழுங்குபடுத்தி, எதிர்மறை ஆற்றலைத் தணிக்கிறது.

சரல் வாஸ்து திருமணம் தொடர்பான சிக்கல்களுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குகிறது. அது மணமக்களின் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் ஒரு திருமண பந்தத்தில் நுழைய உதவுகிறது.

திருமணத்திற்கான வாஸ்துவின் சரல் வாஸ்து தீர்வு, மணமகனின் நேர்மறை எண்ணத்தை மேம்படுத்தி, மணமகனும் மணமகளும் அமர்வதற்கான சிறந்த திசையையும் அதிர்ஷ்ட நிறங்களையும் அறிவுறுத்துகிறது. அதன் மூலம் அந்தத் திருமணப் பந்தம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகின்றன. அது திருமணத்திற்கு ஒரு தீர்வை வழங்க வழி வகுக்கிறது.