சமையல் அறையில் வாஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வநிலை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

வீட்டைப் பொறுத்தவரை சமையல் அறை என்பது ஒரு மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில், பெரிய சமையல் அறைகளைப் பயன்படுத்துவது ஒரு வரையறையாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட திசையில் பாரம்பரிய முறையில் சமையல் அறை அமைப்பதற்காக எந்த விதமான கடுமையான விதிகள் கிடையாது.

சரல் வாஸ்துபடி, 7 சக்கரங்களை ஆற்றல்மிக்கதாக மாற்ற ஒருவர் பெரும்பாலான நேரம் தனக்குச் சாதகமான திசை நோக்கி இருக்க வேண்டும். வழக்கமாக, பெரும்பாலான நேரம் நாம் உறங்கிக் கொண்டும் பணி புரிந்து கொண்டும் இருக்கிறோம். எனவே, பணி புரியும் போது சாதகமான திசை நோக்கி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு வீட்டுப் பெண்மணியும், குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் அதிகப்படியான நேரம் பொழுதைக் கழிப்பதுண்டு. எனவே, உணவு சமைத்துக் கொண்டு சமையல் அறையில் இருக்கும் பொழுது, தமக்குச் சாதகமான திசை நோக்கி இருக்குமாறு அவர்களுக்கு நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம்.

எந்தத் திசையில் உங்கள் சமையல் அறை அமைய வேண்டும்?

வாஸ்து அறிஞர்களால் முறையாக பிரச்சாரம் செய்யப்பட்டு பிரபலம் அடையச் செய்வதால் கடந்த ஒரு சில வருடங்களாக இது வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளது. இப்போது இந்த ‘புராணம்’ பல வகையான மூட நம்பிக்கைகளாலும் நம்பிக்கைகளாலும் காலங்களைக் கடந்து நிற்கிறது. சமையல் அறை தென் – கிழக்கு திசையில் இல்லை என்றால், அது குடும்பத்தினருக்கு எந்த விதமான தீங்கையும் நிச்சயமாக ஏற்படுத்துவதில்லை எனச் சொல்லப்படுவதுண்டு. மேலும், சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல ’அடுப்பு’ அது கேஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என நம்பப்படுகிறது. இப்போது மிக முக்கியமான கேள்வி என்னவெனில், சமைக்கும் பொழுது ‘கேஸ் அடுப்பு’ அமைக்கப்பட வேண்டிய திசை அல்லது ’சமையல் செய்பவர் நிற்கும் திசை’ போன்றவற்றில் எது சரியான திசை என யார் முடிவு செய்வது என்பதாகும்.

சரல் வாஸ்து கோட்பாடுகளின்படி, சமையல் அறை தென் – கிழக்கு திசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. சமையல் அறை பொருத்தமானதாக எதிர்பார்க்கப்படும் திசையில் அமையவில்லை என்பது ஒரு விசயமல்ல. அப்பார்ட்மெண்ட் குடியிறுப்புகளில் வாஸ்து கோட்பாடுகளுக்கு இணக்கமான சமையல் அறைகளை அமைப்பது சாத்தியமில்லை.

சரல் வாஸ்து பரிந்துரைகளின்படி, சின்னஞ்சிறு மாற்றங்கள் செய்வது எளிது. அதன் மூலம் சமையல் அறை தென் – கிழக்கு திசையில் இல்லை என்னும் விளைவைத் தணிக்கச் செய்ய முடியும். சமையல் செய்பவர் தனது பிறந்த தேதியின்படி ஒப்புதல் பெறப்பட்ட சாதகமான திசையைப் பின்பற்றி சமையல் செய்ய வேண்டும்.