உங்கள் செல்வத்தின் மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான அங்கம் வகிப்பது செல்வம். செல்வம் இல்லையென்றால், சமூகத்தில் மதிப்பில்லை. நமது வாழ்வை வசதிமிக்கதாக மாற்றவும் சமூகத்தில் நல்ல அந்தஸ்து பெறவும் செல்வம் ஈட்டுவது இன்றியமையாதது. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் ஒரு பெரிய நிதி இழப்பால் பாதிக்கப்பட்டால், குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. நீண்ட காலம் குடும்பத்தினர் மத்தியில் நெருக்கடி, துன்பம் மற்றும் பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தால், அது நீதிமன்ற வழக்குகள், விரோதம் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கும் கூட வழி வகுக்கிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையும் கூட. அதாவது இந்தச் செல்வம் ஈட்டும் எலிப் பந்தயத்தில், ஒரு சிலர் மட்டும் தங்கள் இறுதி இலக்கை அடைகின்றனர். பெரும்பாலோர் அவ்வாறு அடைய முடியாமல், தங்கள் விதிப்பயன் மற்றும் துரதிர்ஷ்டத்தின் மீது பழி சுமத்துகின்றனர்.

செல்வத்திற்கான வாஸ்துவின் முக்கியத்துவம்

ஒவ்வொரு வீடும் பணியிடமும் ஒரு ‘செல்வம் அமைவிடத்தைப்’ பெற்றுள்ளது. சில சமயங்களில் வீடு அல்லது பணியிடத்தில் செல்வம் அமைவிடம் இல்லாமல் போகலாம். வீட்டில் செல்வம் அமைவிடம் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அது குளியலறை, டாய்லெட் மற்றும் பயன்பாட்டு அறைகளால் தடுக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தால், தன்னிச்சையாகவே அந்த இடத்தில் செல்வச் சிக்கல்கள் தலை தூக்க ஆரம்பிக்கிறது. அதிக அடிபட்டவர்கள் நிதிச் சிக்கல்களால் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.

வீடு அல்லது பணியிடத்தில் செல்வம் அமைவிடம் இருக்க வேண்டிய இடத்தில் குளியலறை, டாய்லெட், பயன்பாட்டு அறை மற்றும் பொருள் சேமிப்பு அறை போன்றவை அமைக்கப்பட்டிருந்தால், அது ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் பெருத்த நிதி இழப்புக்கு வழி வகுக்கிறது.

வீடு அல்லது பணியிடத்தின் நுழைவாயில் அல்லது முன்கதவு சாதகமற்ற திசையில் அமைக்கப்பட்டிருந்தால், கடுமையான நிதி இழப்பு ஏற்படும். அது பெருந்துயருக்கு வழி வகுக்கிறது.

நிதி இழப்பில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அது ஒருவருடைய வாழ்வில் அதிக அளவிலான நிதி இழப்பால் வரும் கடுந்துயரை ஏற்படுத்துகிறது.

சில வேளைகளில், பண வரவு சிறப்பாக இருக்கும். ஆனால், வீடு அல்லது பணியிடத்தில் அதை ஒரு இலாபமாகச் சேமித்து வைக்க முடிவதில்லை. அந்தப் பணம் உள்ளே வந்தவுடன் செலவாகி விடுகிறது. குறைவான பண வரவுடன் ஒப்பிடுகையில், அதிகப்படியான செலவு, பணத்தைச் சேமிக்க முடியாமல் போவதற்கு காரணமாகிறது.

சில சம்பவங்களில், மக்கள் அதிகப்படியான பணத்தை மற்றவர்களுக்கு கைமாற்றாகவோ அல்லது கடனாகவோ தந்திருப்பார்கள். ஆனால், குறித்த நேரத்தில் வட்டி அல்லது முதலைத் திரும்பப் பெற முடியாமல் போகிறது.

அதே போல, தவறான தொழிலில் முதலீடு செய்யப்பட்ட பணமும் உங்கள் வருவாயில் பலத்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது. அது ஒரு மோசமான தொழில் திட்டம் என பின்னர் நிரூபணம் ஆகிறது. அது தவறாகி விடுகிறது. அதுவும் முதலீட்டு பணத்திற்கு பெரும் இழப்புக்கு வழி வகுக்கிறது. அந்தத் தொகை வேறு இடத்தில் தடுத்து நிறுத்தப்படுகிறது. இவ்வாறாக, அதிலிருந்து எப்பொழுதும் எந்தவிதமான இலாபமும் ஈட்ட முடிவதில்லை. ஆவணங்களில் வருவாய் அல்லது இலாபம் தரம் பிரித்துக் காண்பிக்கப்பட்டாலும், உண்மையில் அங்கு எந்தவிதமான இலாபமும் இல்லை.

இன்னும் தீவிரமாகச் சொல்லப் போனால், வங்கியில் கடன் பெற்று தொழில் செய்பவர் மாதாந்திரத் தவணைத் தொகைகளைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அது நாளடைவில் பெருத்த சுமையாக மாறி அவரை திவாலாக்கி விடுகிறது.

சரல் வாஸ்து கொள்கைகளைப் பின்பற்றுவதால், வீடு அல்லது பணியிடத்தில் உள்ள செல்வம் பாதிக்கப்பட்ட இடத்திற்கு எவ்விதக் கட்டுமான உடைபாடுகளும் மாற்றங்களும் இல்லாமல், எளிமையான, விஞ்ஞானநீதியான தீர்வுகள் வழங்கப்படுகிறது. 7 சக்கரங்களைத் தூண்டுவதற்காக, ஒருவருடைய பிறந்த தேதியின் அடிப்படையில் பணிபுரிவதற்கும், உறங்குவதற்கும் சிறந்த திசையை சரல் வாஸ்து அறிவுறுத்துகிறது.

இழந்த நிதியைத் திரும்பப் பெற்று இலாபம் ஈட்டும் விதத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் 7 சக்கரங்களும் ஆற்றல் பெற்று உதவுகின்றன. வீட்டிலிருந்து 66.66% சாதகமான விளைவுகளும் பணியிடத்திலிருந்து 33.33% சாதகமான விளைவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.