ஜீவன் சமஸ்த்யா முக்த கிராம் யோஜனா

ஜீவன் சமஸ்த்யா முக்த கிராம் யோஜனா எனப்படுவது மனிதகுலத்தின் மேன்மைக்காக டாக்டர் ஸ்ரீ சந்திரசசேகர் குருஜி அருளிய மாபெரும் ஒரு சமூக முன்முயற்சி. ‘ஜீவன் சமஸ்த்யா முக்த கிராம் யோஜனா’ திட்டத்தின் கீழ், சி ஜி பரிவாரத்தால் கிராமங்கள் தத்தெடுத்துக்கப்படுகின்றன. அந்த கிராமத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவரது இல்லத்திற்கென சரல் வாஸ்து அளிக்கப்படுகிறது. கிராமத்து மக்கள் தங்களது ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளமையை மேம்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள சரல் வாஸ்து அவர்களுக்கு உதவும். எல்லா கிராமத்தினருக்கும் இந்த சமூக திட்டம் இலவசம். ‘ஜீவன் சமஸ்த்யா முக்த கிராம் யோஜனா’ திட்டத்தின் கீழ், சி ஜி பரிவாரத்தால் சுவீகாரம் செய்யப்பட்ட முதல் கிராமம் கோட்ச்சி கிராமம். கோட்ச்சி கிராமத்தின் பஞ்சாயத்து சபை உறுப்பினரான திரு. நாகராஜ் சூப்பி இந்தத் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்தக் கிராமம் மிகவும் பின்தங்கிய வறிய கிராமம், குருஜி நினைத்திருந்தால் இதைவிட சிறந்த கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தங்கள் சரல்வாஸ்து நலன்களை அளித்திருக்கலாம். சரல்வாஸ்துவின் பலன்களை கிராமத்தினருக்கு அளித்து அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவுவதே குருஜியின் நோக்கம் என்றும் அவர் கூறினார். சரல் வாஸ்துவில் உள்ள வாஸ்து நிபுணர்கள் கிராமத்தில் இருந்து, ஒவ்வொரு வீட்டின் வாஸ்து ஆலோசனையையும் நிறைவு செய்வார்கள்.

சி ஜி பரிவாரத்தின் முக்கிய குறிக்கோள் உங்கள் வாழ்வின் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு கூறுவதே ஆகும். ஏழைகள் மற்றும் அனாதை குழந்தைகளின் நலனுக்காக ஹூப்லி தார்வாத் சாலையில் 14 ஏக்கர் நிலத்தை சி ஜி பரிவாரம் பெற்றுள்ளது. இந்த வசதிக்கான பணி நிறைவு செய்யப்பட்டால், ஆண்டுதோறும் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்கு வசதி கொண்ட கல்வி வசதி இலவசமாகக் கிடைக்கும்.

‘சிக்சான் சமஸ்யா முக்தா யோஜனா’ என்ற தனது மற்றொரு புதிய திட்டம் குறித்த சிந்தனையையும் குருஜி பகிர்ந்துகொண்டுள்ளார். இதன்படி, படிப்பில் கவனம் செலுத்தி படிக்க முடியாத குழந்தைகளுக்கு, சரல்வாஸ்துவின் மூலம் கவனம் செலுத்தி படிக்கும் நுணுக்கங்கள் கற்று கொடுக்கப்படும். கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் சரல் வாஸ்துவின் நிபுணர்கள் பயிற்சி அளிப்பார்கள். எனவே அவர்கள் தங்கள் வளாகத்தைக் குறித்து எவ்வாறு அறிவது, அங்கு படிக்கும் குழந்தைகள் அவர்களது நலனுக்காக எப்படி அவர்களது அதிர்ஷ்ட திசையில் அமர்ந்து படிப்பது என்பதைக் கற்பார்கள்.