உங்கள் தொழிற்சாலை மீது வாஸ்து எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறது?

குறைவான பொருளாதார வளர்ச்சியுடன் உயர் பணவீக்கம் உள்ள ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிற நாடுகள் ஒரு வரையறையாக மாறியுள்ளதைப் போல, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களைப் போல, மந்தமான ஆசியப் பொருளாதாரத்தின் தற்போதைய முயற்சிமிக்க காலங்களில், இந்தியா ஒரு பிரம்மாண்டமான எழுச்சிமிக்க பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது. அதன் மூலம் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. மேலும் சராசரி இந்தியரின் வாழ்வில் அனைத்துவிதமான வளர்ச்சிகளும் அதிகரித்துள்ளன. உலகமயமாதல் மற்றும் தடையில்லா வணிகம் ஆகியவை இன்றைய உலகப் பொருளாதாரத்தின் போக்குகளாக மாறி உள்ளன. உலகளாவிய பொருளாதாரச் சக்தியாக இந்தியா மாறுவதற்கான முன்னேற்பாடுகளுக்கு வழி ஏற்பட்டுள்ளது. விரைவான தொழில்மயமாக்கல் இன்றையத் தேவையாக உள்ளது.

 

சிறப்பான இலாபத்துடன் கூடிய சாத்தியமுள்ள புதிய தொழில் நிறுவனத்தை நிறுவ விரும்பும் வருங்காலத் தொழிலதிபர்கள் தங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை யாதெனில், உகந்த நிலம், அதை அணுக ஏதுவான வழித் தடங்கள், மலிவான மின்சாரம், பிரதான சாலைகளையும் ரயில் வசதிகளையும் இணைக்கும் வசதிகள், எளிதாகக் கிடைக்கக்கூடிய கச்சாப் பொருள்கள் மற்றும் மனித வளம் போன்றவை. மிகப் பெரிய தொழிற்சாலைகளையும் நடுத்தர மற்றும் குறுந்தொழில்களையும் நிறுவுவதில் கைதேர்ந்த மிகச் சிறந்த அனுபவம் பெற்ற தொழிலதிபர்கள், சேமிக்கும் விதத்தில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் தொழிலை நிறுவுவார்கள். இரு வகையினரும் வித்தியாசமான அணுகுமுறைகளினால் தங்கள் தொழிலை மேற்கொள்வார்கள்.