முன் கதவின் திசையை எவ்வாறு சரி பார்ப்பது?

சாதகமான திசைகள்

திசைகள், அவை ’சாதகமானவையாக இருந்தாலும்’ அல்லது ’சாதகமற்றவையாக இருந்தாலும்’ ஒருவருடைய பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒவ்வொருவரும் நான்கு ‘அதிர்ஷ்டகரமான’ திசைகளையும், ‘துரதிர்ஷ்டமான’ திசைகளையும் பெற்றிருப்பார்கள். ஒருவருக்கு வடக்கு அல்லது கிழக்கு திசை பொருத்தமாக இருந்தால், இந்த திசைகளிலிருந்து வளத்தைத் தருவிப்பது சாத்தியமானது.

உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் சரல் வாஸ்து அட்டவணை உங்களுக்குச் சாதகமான திசைகளை வழங்குகிறது. உங்கள் வீடு அல்லது பணியிடத்தின் முன் கதவு சாதகமான திசையில் அமைக்கப்படவில்லை எனில், ஆரோக்கியம், செல்வம், வளம், உறவுமுறை மற்றும் நற்பெயர் என ஒவ்வொன்றையும் இழக்க நேரிடும். முன் கதவு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சாதகமற்ற திசையில் அமைந்திருந்தாலும் கூட, அது மோசமான விளைவுகளைத் தரும். வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் குழப்பம், நீதிமன்ற வழக்குகள், ஆரோக்கியச் சிக்கல்கள் போன்ற எதிர்மறை விளைவுகளுக்கு அது காரணமாக அமையும்.

எனினும், இதில் ஒரு நல்ல செய்தி என்னவெனில், சரல் வாஸ்து என்னும் பிரபல விஞ்ஞானம் ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒரு தீர்வைத் தருகிறது. நமது அனைத்துச் சிக்கல்களுக்கும் அது நடைமுறைரீதியான, பயன்பாடுமிக்க, பிரபஞ்சரீதியான தீர்வாக உள்ளது. முன் கதவை மறு கட்டமைப்பு செய்தல் போன்ற எந்த விதமான கட்டுமான மாற்றங்களையும் உங்கள் வீட்டில் செய்யத் தேவையில்லை. சரல் வாஸ்துவை சரியான முறையில் நடைமுறைப்படுத்தல் வாயிலாக, வாஸ்து குறைபாடுகளின் எதிர்மறை விளைவுகளை ஒருவர் வெல்ல முடியும். ஏனென்றால், சரல் வாஸ்து தீர்வுகள் எதிர்மறை ஆற்றலைத் தணித்து, வீடு முழுவதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.