சரல் வாஸ்துவால் வழங்கப்படும் உறவுமுறைக்கான வாஸ்து டாக்டர். ஸ்ரீசந்திரசேகர் குருஜி அவர்களால் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறியப்பட்ட ஒப்பற்ற, விஞ்ஞானரீதியான வாஸ்து தீர்வாகும். குடும்ப உறுப்பினர்கள், உடன் பணிபுரிவோர், அல்லது வியாபாரப் பங்குதாரர்கள் மத்தியில் ஏற்படும் உறவுமுறை, முதன்மையாக அவர்கள் வசிக்கின்ற, பணிபுரிகின்ற வீடு, அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனத்தில் சூழந்துள்ள ஆற்றலால் தாக்கம் பெற்றதாகும்.
கணவன்-மனைவி, குழந்தைகள், மாமா-அத்தை, நெருங்கிய நண்பர்கள், அண்டை வீட்டார் மத்தியில் உள்ள உறவுமுறை இயற்கையாகவே வேறுபட்டிருந்தாலும், நமது பாரம்பரிய குடும்ப அமைப்பில் உள்ள மிக முக்கியமான அங்கமான உறவுமுறை நமது தினசரி வாழ்வில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவுமுறை நமது கலாச்சாரத்தில் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் இன்றைய உலகில் உறவுமுறை விரிசல் மற்றும் குழந்தைப் பேறின்மை போன்றவை விவாகரத்துக்கும் பிரிவுக்கும் வழி வகுக்கின்றன. அது சமூகப் பிரிவினைக்கும், சமூகத்தில் ஒரு பதற்றமான சூழலுக்கும் காரணமாகிறது.